ETV Bharat / bharat

நாட்டில் கரோனா நிலவரம்: 97 லட்சத்தை தாண்டிய பாதிப்பு! - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

நேற்று (டிசம்பர் 7) மட்டும் 26 ஆயிரத்து 567 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 97 லட்சத்து மூன்றாயிரத்து 770 ஆக உயர்ந்துள்ளது‌.

கரோனா
கரோனா
author img

By

Published : Dec 8, 2020, 1:31 PM IST

நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாள்களாக குறைந்துவருகிறது. தினந்தோறும் 30 ஆயிரம் பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்து 567 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி 385 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 97 லட்சத்து மூன்றாயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 958 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 91 லட்சத்து 78 ஆயிரத்து 946 ஆக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கரோனா
கரோனா அப்டேட்

அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 லட்சத்து 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகா மாநிலத்தில் கரோனா பாதிப்பு எட்டு லட்சத்து 94 ஆயிரமாக உள்ளது.

இதுவரை மொத்தமாக 14 கோடியே 88 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மட்டும் சுமார் 10 லட்சத்து 26 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.