டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 154 பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 8 லட்சத்து 74 ஆயிரத்து 376 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று (ஜூலை 11) ஒரே நாளில் 39 ஆயிரத்து 649 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 14 ஆயிரத்து 713ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 724 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 8 ஆயிரத்து 764 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
நேஷனல் வைட் தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாட்டில் இதுவரை 37 கோடியே 73 லட்சத்து 52 ஆயிரத்து 501 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 10 ஆம் தேதி வரை 43 கோடியே 23 லட்சத்து 17 ஆயிரத்து 813 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. இதில் 14 லட்சத்து 32 ஆயிரத்து 343 மாதிரிகள் நேற்று (ஜூலை 11) பரிசோதிக்கப்பட்டன.
இதையும் படிங்க: எதிர்காலத்தில் அரசியல் பிரவேசம்- ரஜினி பேட்டி!