டெல்லி: இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 405 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 253 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தற்போது 1லட்சத்து 81 ஆயிரத்து 75 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 34 ஆயிரத்து 226 பேர் கரோனாவில இருந்து குணமடைந்துள்ளனர். 10 லட்சத்து 84ஆயிரத்து 247 கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் தினசரி தொற்று விகிதம் 1.24% ஆகவும், வாராந்திர தொற்று விகிதம் 1.98% ஆகவும் உள்ளது. இதுவரை இந்தியாவில் 175.83 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:மாட்டுத் தீவன ஊழல்: லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை