டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,335 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று(ஏப். 01) தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் 52 பேர் உயிரிழந்தனர். மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 5 லட்சத்து,21 ஆயிரத்து 181 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,918 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 78.97 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
12 முதல் 14 வயது தடுப்பூசி இயக்கத்தின் தொடக்கத்திலிருந்து 1.72 கோடிக்கும் அதிகமான இளம் பருவத்தினருக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்வு!'