கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து படை குவிப்பும், பதற்றமும் நீடித்துவந்தது.
படைகளைத் திரும்பப்பெற்று அமைதியை நிலைநாட்ட இருதரப்பிலும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியாக, 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் பலனாக கிழக்கு லடாக்கின் பாங்காங் சோ ஏரியின் வடக்கு, தெற்குக் கரைகளிலிருந்து இரு நாடுகளின் படைகள் திரும்பப்பெறப்பட்டன.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 9) லடாக் எல்லையில் மீதமுள்ள படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அலுவலர்களும் சந்தித்துக் கலந்துரையாடினர்.
காலை 10.30 மணியளவில் தொடங்கிய 11ஆம் கட்ட பேச்சுவார்த்தையானது, இரவு 11.30 மணி வரை நீடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சந்திப்பில் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: 'பாதுகாப்பை வலுப்படுத்த...!' - கஜகஸ்தான் அமைச்சருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!