மும்பை (மகாராஷ்டிரா): மத்திய பாஜக அரசிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் I.N.D.I.A கூட்டணியை உருவாக்கினார்கள். இந்த I.N.D.I.A கூட்டணியின் முதல் கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் நடைபெற்ற நிலையில், தற்போது மூன்றாம் கூட்டம் நேற்று மற்றும் இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள ஹோட்டல் கிராண்ட் ஹயாட்டில் நடைபெற்று வருகிறது.
-
#INDIA #UnitedWeStand pic.twitter.com/r6lRQXHdTJ
— M.K.Stalin (@mkstalin) August 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#INDIA #UnitedWeStand pic.twitter.com/r6lRQXHdTJ
— M.K.Stalin (@mkstalin) August 31, 2023#INDIA #UnitedWeStand pic.twitter.com/r6lRQXHdTJ
— M.K.Stalin (@mkstalin) August 31, 2023
I.N.D.I.A கூட்டணியின் சார்பாக இன்று நடைபெற்று வரும் மும்பை கூட்டத்தில், ஒருங்கிணைந்த குழுவை உருவாக்க முடிவு செய்யப்பட்டு, 13 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: One Nation, One Election: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' - ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு அமைப்பு!
I.N.D.I.A கூட்டணியின் சார்பாக அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழுவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத் பவார், தமிழக முதல்வரும். திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பிகார் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வரும் ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரன், சிவசேனா (உதவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத், ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சதா, சிபிஐ தலைவர் டி ராஜா, தேசிய மாநாட்டுத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, PDP தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியும் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
I.N.D.I.A கூட்டணியின் இந்த 13 உறுப்பினர்கள் கொண்ட ஒருங்கிணைந்த குழு மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பாக செயல்படும். மேலும் இந்த குழு இட ஒதுக்கீடு குறித்தும் முக்கிய பணிகளை தொடங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மும்பையில் திரண்ட 'I.N.D.I.A' கூட்டணி கட்சிகள்.. பாஜகவிற்கு நெருக்கடி தருமா?