ETV Bharat / bharat

இந்தியா கையை மீறிப் போகிறதா மாலத்தீவு? சீனாவின் அடுத்த திட்டம் என்ன? இந்தியாவிற்கு வலுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்..!

மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவப்படையை வெளியேற்றுவதில் முனைப்புடன் இருந்த மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ், இதற்கு இந்திய அரசு ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல், இந்தியாவிற்கு வலுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை மேற்கோள் காட்டுவதாக உள்ளது.

இந்தியா கையை மீறிப் போகிறதா மாலத்தீவு?
இந்தியா கையை மீறிப் போகிறதா மாலத்தீவு?
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 10:01 PM IST

டெல்லி: இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு தான் மாலத்தீவு. இது குட்டி நாடாக இருந்தாலும், புவிசார் அரசியலில் மிக முக்கிய இடத்தில் உள்ளது. இதனாலேயே மாலத்தீவின் ஆதரவு நிலைப்பாட்டை உறுதி செய்வது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தங்கள் முழு கவனத்தையும் மாலத்தீவு மீதே வைத்திருக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க மொழி, கலாசாரம், வர்த்தகம் என இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் பல வழிகளில் நெங்கிய உறவு உண்டு. ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து மாலத்தீவு விடுதலை பெற்ற போது, அதை சுதந்திர நாடாக அங்கீகரித்த முதல் நாடு இந்தியாதான். மேலும், 2004ல் ஏற்பட்ட சுனாமி தாக்குதலின் போது மாலத்தீவுகளுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புதல், கரோனா தொற்றின் போது வாக்ஸின் தடுப்பூசிகளை அளித்தல் என மாலத்தீவுடன் இந்தியா மிக நெருக்கமான உறவை பேணி வந்தது. இதன் காரணமாக மாலத்தீவும் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், 2010ல் மாலத்தீவுக்கு கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்கியது. இதையடுத்து தான், அங்கு இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் முதன் முதலில் தொடங்கியது. இந்த கண்காணிப்பு ஹெலிகாப்டர்கள் மூலம் மாலத்தீவின் இறையாண்மை பாதிக்கப்படுவதாகவும், இந்தியாவின் தலையீடு அங்கு அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில், இந்தியா மாலத்தீவுவில் அளவுக்கு மீறி மேலாதிக்கம் செலுத்துவதாக குற்றம் சாட்டி வந்த அப்துல்லா யாமீன் அங்கு அதிபரானதைத் தொடர்ந்து, இரு நாட்டின் நட்புறவிலும் விரிசல் ஆரம்பமானது. இவரின் ஆட்சியின் போது (2013 - 2018) இந்தியாவுக்கு எதிரான வெறுபுணர்வு மாலத்தீவில் வலுத்தது. அப்போதுதான் சீனாவின் ஆதிக்கம் அங்கு ஊடுருவ ஆரம்பித்தது.

இவர் ஆட்சிக்காலத்தில், இவரது அமைச்சராக இருந்த முகமது மூயிஸ்தான் தற்போது மாலத்தீவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கடந்த நவ.17ம் தேதி பதவியேற்ற இவரின் முதன்மைக் குறிக்கோளே மாலத்தீவில் பணியமர்த்தப்பட்டுள்ள இந்திய ராணுவத்தை அங்கிருந்து வெளியேற்றுவதுதான்.

அந்நாட்டில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிகை 75 என கூறப்படுகிறது. மாலத்தீவிற்கு இந்தியா பரிசளித்த டோர்னியர் விமானத்தையும், இரு கண்காணிப்பு ஹெலிகாப்டர்களையும் இயக்குவதில், மாலத்தீவு ராணுவத்திற்கு உதவுவதற்கே, அங்கு அவர்கள் பணியில் உள்ளனர். இதனை எதிர்த்தே அந்நாட்டின் மக்கள் தேசிய கட்சி (முகமது மூயிஸ் கட்சி) பிரச்சார இயக்கத்தை தீவிரமாக நடத்தியது.

முகமது மூயிஸ் சீனாவின் ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது. இவர் தேர்தல் பிரச்சாரத்தில் போது “இந்தியாவே வெளியேறு” என்றுதான் பிரச்சாரம் செய்து வந்தார். மேலும், முந்தைய அதிபரான (2018 - 2023) முகமது சோலியின் இந்தியா உடனான நெருக்கம் மாலத்தீவின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பிரச்சாரம் செய்தார். இதற்கு மக்கள் ஆதரவும் வலுக்கவே, இவர் தேர்தலில் வெற்றி பெற்று தற்போதைய மாலத்தீவின் அதிபராக உள்ளார்.

பதவி ஏற்றது முதலே இந்திய ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் இவர், அதற்கான பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இந்தியா தனது ராணுவப்படைகளை திரும்பப் பெருவதற்கு சம்மதித்துள்ளதாக நேற்று (டிச.03) மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் தெரிவித்தார். துபாயில் நடைபெற்ற COP28 காலநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய நிலையில், இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (டிச.01) துபாயில் நடைபெற்ற சர்வதேச காலநிலை உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடியும், மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸும் விரிவாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், இந்திய ராணுவப்படை மாலத்தீவில் இருந்து வெளியேறுவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய ராணுவப்படை மாலத்தீவில் இருந்து வெளியேற்றப்படுவது, சீனாவின் ஆதிக்கத்தை மாலத்தீவில் நிலை நிறுத்துவதற்கான முதல்படியாகவே பார்க்கப்படுகிறது. மேலும், இலங்கையில் இருந்த இந்திய ராணுவப்படை வெளியேற்றம் இந்தியாவிற்கு முகப்பெரிய அடியாக இருந்த சூழலில், தற்போது மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவப்படையின் வெளியேற்றம் இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மணிப்பூரில் பிரிவினைவாத குழுக்களிடையே துப்பாக்கிச் சூடு - 13 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.