ETV Bharat / bharat

ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் - புறக்கணித்த இந்தியா! - Russia-Ukraine live news

ஐநா நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போக்கை கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபுகள் ஆகிய நாடுகள் புறக்கணித்தன.

ரஷ்யாவை கண்டிக்கும் தீர்மானம் - புறக்கணித்த இந்தியா!

author img

By

Published : Feb 26, 2022, 1:27 PM IST

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நேற்று (பிப். 25) ரஷ்யாவைக் கண்டிக்கும் தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதில் அமெரிக்கா, அல்பெனியா உள்ளிட்ட 60 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தன. கூட்டமைப்பில் வாக்களிக்கும் அதிகாரம் கொண்ட 15 நாடுகளில் 11 வாக்குகள் ரஷ்யாவிற்கு எதிராகன வாக்களித்தன.

15 நாடுகள் கொண்ட சபையில் இது பெரும்பான்மையாக இருந்த போதும் ரஷ்யா வீட்டோ உரிமையைக் கொண்டு அந்த தீர்மானத்தை ரத்து செய்தது. இந்த எதிர்ப்பு தீர்மானத்தில் இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபுகள் உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளன.

தீர்மானத்தைப் புறக்கணித்தது குறித்து இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி கூறுகையில், இந்த முடிவானது இந்தியாவின் ராஜதந்திர தேவைக்கு ஏற்ற முடிவாகும். இந்த பிரச்னைக்கு உடனடி பேச்சு வார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணமுடியும். சிக்கலுக்குரியது என்றாலும் இதுவே சிறந்த வழி எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, சென்ற வியாழன் அன்று ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் மோடியைத் தொடர்பு கொண்டு ஆலோசனை மேற்கொண்டது, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்க்கன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரைத் தொடர்பு கொண்டு தீர்மானத்திற்கு ஆதரவளிக்கக் கோரியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மேலும் ஒரு மருத்துவ மாணவி உக்ரைனில் சிக்கித் தவிப்பு : பெற்றோர்கள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.