ETV Bharat / bharat

IND VS NZ 1st ODI: 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி! - ஹர்த்திக் பாண்ட்யா

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியா
இந்தியா
author img

By

Published : Jan 18, 2023, 10:43 PM IST

ஹைதராபாத்: டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் இன்னிங்ஸை தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் தொடங்கினர். பெரிய அளவில் சோபிக்காத கேப்டன் ரோகித் சர்மா 34 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 8 ரன்கள், இஷான் கிஷான் 5 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் அசுர ஆட்டம் காட்டிய சுப்மான் கில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறவிட்டு தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். நட்சத்திர வீரர் சுப்மான் கில் 149 பந்துகளில் 19 பவுண்டரி, 9 சிக்சர் என தெறிக்கவிட்டு 208 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் 19 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர், சர்வதேச அளவில் இரண்டாவது வீரர், இரட்டை சதம் அடித்த 5-வது இந்திய வீரர் உள்பட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது. குல்தீப் யாதவ் 5 ரன்களுடனும், முகமது ஷமி 2 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். 350 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்கத்தில் சொதப்பினாலும் நியூசிலாந்து வீரர்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடக்க வீரர் பின் அலென் 40 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக நடையைக் கட்டினர். முன்னணி வீரர் டேரி மிட்செல் 9 ரன்கள் மற்றும் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் டாம் லாதம் 24 ரன்கள் என 45 ரன்களுக்கு நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தட்டுத் தடுமாறி வந்தது.

இதனால் ஒரு கட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்ற நம்பிக்ககையும், கொண்டாட்டமும் ரசிகர்களிடையே காணப்பட்டது. ரசிகர் கூட்டத்தில் மிதந்த உற்சாக அலை சிறிது நேரத்தில் நிசப்த அலையாக மாறத் தொடங்கியது. காரணம்... களமிறங்கிய நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் என்பவரால்!

இந்திய பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்ட மைக்கேல், பந்து வீச்சாளர்களுக்கு கடும் குடைச்சல் கொடுத்தார். தேவைக்கு ஏற்பட்ட எல்லைக் கோட்டுக்கு பந்துகளை அனுப்பிய மைக்கேல், சிக்சர்களை விளாசி இந்திய ரசிகர்களின் வயிற்றில் புளியை கரைக்கச் செய்தார். அபாரமாக ஆடிய மைக்கேல் சதம் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இதனால் மைதானத்திற்குள் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஒருவழியாக ஷர்துல் தாக்கூர், மைக்கேல் பிரேஸ்வெலை வெளியேற்றி இந்திய ரசிகர்களை பெருமூச்சு விடச் செய்தார். 140 ரன்கள் குவித்த மைக்கேல், எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாகி வெளியேறினார்.

மறுபுறம் அவசரகதியாக ஸாட்களை அடித்து நியூசிலாந்து வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்க, மீண்டும் இந்திய வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக தெரிந்தது. மறுபுறம் போராடிய மிட்செல் சான்டரும் அரை சதம் அடித்து வெளியேற இறுதி ஓவரில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

நேர்த்தியாக பந்து வீசிய முகமது சிராஜ் நியூசிலாந்து அணிக்கு கிடுக்குப்பிடி கொடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 49. 2 ஓவர்கள் முடிவில் 337 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய பந்துவீச்சாளரான முகமது சிராஜ் 10 ஓவர்கள் பந்து வீசி 46 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினார். மற்றபடி குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது ஷமி, ஹர்த்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 21ஆம் தேதி (வரும் சனிக்கிழமை) சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: Shubman Gill: இரட்டை சதம் விளாசிய சுப்மான் கில்.. ஆடிப்போன நியூசிலாந்து வீரர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.