நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. அந்த கண்கள் கண்பார்வையற்ற 4 பேருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
அவர் கண்கள் தானம் செய்தது கர்நாடக மக்களிடையே குறிப்பாக அவரது ரசிகர்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கண் தானம் செய்வதாக கூறி தங்களின் பெயர்களை பதிவு செய்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நாராயண நேத்ராலய மருத்துவமனை டாக்டர் புஜங்கஷெட்டி கூறியதாவது, "நடிகர் புனித் ராஜ்குமாரால் ஈர்க்கப்பட்ட நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கண் தானம் செய்ய முன் வருகின்றனர். நாராயண நேத்ராலயா கண் மருத்துவமனை இப்போது புனித் ரசிகர்களால் நிரம்பி வழிகிறது. ஏற்கனவே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.
புனித் நினைவிடத்திற்கு சென்றவர்களில் பெரும்பாலானோர் நேரடியாக நாராயண நேத்ராலயாவுக்கு வந்து கண் தானம் செய் பதிவு செய்கின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த அனுபவமும் எனக்கு உண்டு - ஓ.பன்னீர்செல்வம்