ETV Bharat / bharat

"புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு போகாதது மகிழ்ச்சி" - சரத் பவார்! - தேசிய வாத காங்கிரஸ்

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவில் பங்கேற்காதது மகிழ்ச்சி அளிப்பதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

சரத்பவார்
Sarad pawar
author img

By

Published : May 28, 2023, 7:05 PM IST

புனே: டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 28) திறந்து வைத்தார். விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், நீதிபதிகள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், தமிழ்நாட்டை சேர்ந்த மடாதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, நாடாளுமன்ற கட்டடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோலை, மக்களவை சபாநாயகர் இருப்பிடம் அருகே பிரதமர் நரேந்திர மோடி நிறுவினார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில், "நாடாளுமன்ற திறப்பு விழாவை இன்று காலை நான் பார்த்தேன். நான் அங்கே செல்லாதது குறித்து மகிழ்ச்சி அடைந்தேன். அங்கே நடந்தவையை பார்த்து மிகவும் எரிச்சல் ஏற்பட்டது. நாம் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்கிறோமா? இந்த நிகழ்ச்சி குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் தானா? என்று எண்ணத் தோன்றியது.

நவீன அறிவியலின் அடிப்படையில் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியதற்கு, நேர்மாறாக புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சி நடந்தது. திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவரை அழைப்பது அரசின் கடமை. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் அங்கே இல்லை. அந்த நிகழ்ச்சி முழுவதும், குறிப்பிட்ட மக்களுக்கானதாகவே இருந்தது.

நாடாளுமன்ற பழைய கட்டடத்துடன் நமக்கு நெருக்கமான உறவு உண்டு. ஆனால், புதிய நாடாளுமன்ற கட்டடம் பற்றி எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. திறப்பு விழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்றிருந்தால், சிறப்பாக இருந்திருக்கும்" என கூறினார்.

இதைத் தொடர்ந்து புனேவில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி சுப்ரியா சுலே, "எதிர்க்கட்சியினர் இல்லாமல் நடைபெற்ற நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா, முழுமை பெறாத நிகழ்ச்சியாக மாறிவிட்டது. நாட்டில் ஜனநாயகம் இல்லை என்பதை இது காட்டுகிறது" என குறிப்பிட்டார்.

முன்னதாக திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "புதிய நாடாளுமன்ற திறப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கட்டடம் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்கு சிறந்த உதாரணமாக இருக்கும். இது வெறும் கட்டடம் இல்லை. 140 கோடி இந்தியர்களின் லட்சிய சின்னம். இக்கட்டடம் இந்திய உறுதியை வெளி உலகிற்கு எடுத்துரைக்கிறது. புதிய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயிலாக இருக்கும். இந்தியாவை உலக நாடுகள் இன்றும் நன்மதிப்புடன் பார்க்கின்றன" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: Rahul Gandhi : நாடாளுமன்ற திறப்பை தனக்கான பட்டாபிஷேகமாக கருதுகிறார்.. ராகுல் காந்தி விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.