ETV Bharat / bharat

செயற்கை கருத்தரித்தல் முறையில் பசுங்கன்றுகள் ஈன்றெடுக்கும் ஆராய்ச்சியில் புதுமைல்கல்

author img

By

Published : Dec 26, 2022, 10:31 PM IST

வாடகைத் தாய் முறையில் ஒரு பசு மூலம் ஆண்டுக்கு 10 முதல் 12 பெண் கன்றுகளை ஈன்றெடுக்கும் ஆராய்ச்சியில் ஆந்திர கால்நடை பல்கலைக்கழகம் சாதனைப் படைத்துள்ளது.

பசு
பசு

திருப்பதி: செயற்கை கருத்தரித்தல் முறையில் ஒரு பசுவில் இருந்து ஆண்டுக்கு 12 பெண் கன்றுக் குட்டிகளை ஈன்றெடுக்கும் சோதனையில் வெற்றி கண்டுள்ளதாக ஆந்திர எஸ்.வி. கால்நடைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை பல்கலைக்கழகத்தில், செயற்கை கருத்தரித்தல் முறையில் ஆண்டுக்கு 10 முதல் 12 பசுங்கன்றுகளை ஒரே பசு மூலம் ஈன்றெடுக்கும் ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர்.

ஆராய்ச்சி குறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது, "திருமலை திருப்பதிக்கு ஆண்டுதோறும் கால்நடை பொருட்களான பால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்டவைகளின் தேவை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் கால்நடைகளை உற்பத்தி செய்ய இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஒரு பசுவில் இருந்து கரு முட்டைகளை சேகரித்து ’சரோகசி’ எனப்படும் வாடகைத் தாய் முறையில் ஆண்டுக்கு 10 முதல் 12 பசுங்கன்றுகளை ஒரே பசுவில் இருந்து ஈன்றெடுக்கும் வகையில், ஒவேம் பிக்கெப் டிரான்ஸ் வெஜினல் அல்ட்ரா சவுண்ட் கருத்தரித்தல் ஆராய்ச்சி நடைபெற்றது.

அதன்படி, ஆரோக்கியமான மற்றும் பால் அதிகம் சுரக்கும் கன்று தேர்ந்தெடுக்கப்பட்டு , செயற்கை கருத்தரித்தலுக்கான ஊசி செலுத்தப்பட்ட நிலையில், குறிப்பிட்ட நாட்கள் ஓவுலேசன் எனப்படும் அண்டவிடுப்பு (அதாவது கருமுட்டையில் இருந்து முதிர்ந்த முட்டை வெளியேறும் நிலை) செயல்நிலை நிறைவு பெற்றது. தொடர்ந்து, பசுவின் முட்டைகள் அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் மூலம் சேகரிக்கப்படுகின்றன.

ஆய்வக இன்குபேட்டரில் வைக்கப்படும் முட்டைகள் குறிப்பிட்ட நாட்களை கடந்ததும் கருமுட்டைகளாக மாறிய நிலையில், அவை பசுக்களுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஆய்வின்படி ஒரு பசுவில் இருந்து 39 முட்டைகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அதில் 21 கருமுட்டைகள் உருவானதாகவும் , அதை 33 பசுக்களுக்கு செலுத்தியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதில் 5 பசுக்கள் கருவுற்றதாகவும் ஏறத்தாழ 8 பசுக்கள் சோதனைக் கட்டத்தில் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதன் மூலம் கால்நடை உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி குறிப்பிட்ட காலத்திற்குள் கால்நடை வளர்ப்பில் தன்னிறைவு பெறமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பீகார் வந்த 11 வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.