உத்திரபிரதேசம்: பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் அசுர வேகத்தில் சென்ற சொகுசுகார் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த நாஙு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்திற்கு முன்பாக BMW கார் மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்ததை காருக்குள் இருந்தவர் வெளியிட்ட பேஸ்புக் வீடியோ காட்டுகிறது.
வீடியோ தொடங்கும் போது, உயிரிழந்தவர்களில் ஒருவர், பேஸ்புக் லைவ் வீடியோவில் சொகுசு காரின் ஸ்பீடோமீட்டரைக் காட்டும் போது,"charo marenge (நாங்கள் நால்வரும் இறந்துவிடுவோம்)" என்று கூறுகிறார். ரோஹ்டாஸில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஆனந்த் பிரகாஷ் (35) காரை இயக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது காரில் உடன் பயணித்த ஒருவர் காரை இன்னும் வேகமாக செலுத்தும் படி அவரிடம் கூறுவதைக் கேட்கலாம்"காம் சே காம் 290, பெலோ ஜித்னா பெல் சக்தா ஹை"(குறைந்தபட்சம் 290ஐ தொட்டு உங்களால் முடிந்தவரை வேகமாக ஓட்டுங்கள்). எனக்கூறுவது வீடியோவில் பதிவாகி உள்ளது.
இந்த அசுர வேகத்தால் பிஎம்டபிள்யூ காரில் பயணம் செய்த 4 பேரும் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல் பாகங்கள் நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்தன. அக்டோபர் 14 ம் தேதி ஹாலியாபூர் காவல் நிலையத்தில் இருந்து 83 கி.மீ தூரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. பலியானவர்கள் ஆனந்த் பிரகாஷ், அகிலேஷ் சிங், தீபக் குமார் மற்றும் முகேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கயிறு கட்டி பைக்கில் இழுத்துச்செல்லப்பட்ட இளைஞர்.. கடனால் நேர்ந்த கொடுமை....