கரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்துவருவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது சூரத் நகரத்தில் ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 2 மருத்துவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில், சூரத் நீதிமன்றம் அந்த 2 மருத்துவர்களுக்கு 15 நாட்கள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், இதை மருத்துவர்கள் ஏற்க மறுத்தால் சிறையில் அடைக்குமாறும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊழலில் சிக்கி பணி நீக்கம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு சலுகைகள்- உயர் நீதிமன்றம் வேதனை