அமராவதி: ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகள் கரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. ஊரடங்கிற்கு முன்னதாக, நாளொன்றுக்கு ரூ. 3 கோடிக்கும் அதிகமாக உண்டியல் நன்கொடை கிடைந்ததுவந்தது.
இந்தளவு நன்கொடை இரண்டு ஆண்டுகளாக கிடைக்கவில்லை. இந்தாண்டு முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் உண்டியல் காணிக்கை உயரத்தொடங்கியுள்ளது. இருப்பினும் பல்வேறு தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கியாதால், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.1,500 கோடி கோயில் நிர்வாகத்திற்கு கிடைத்துள்ளது.
இந்த பணத்தை வைத்து கோயில் வாளாகத்தில் உள்ள 13 விருந்தினர் மாளிகைகளை புனரமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதோடு மகாராஷ்டிராவின் நவி மும்பையில் தேவஸ்தானம் கட்டிவரும் புதிய கோயிலின் கட்டுமானப் பணிகளுக்கும் இந்த தொகை பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு தேவையான 10 ஏக்கர் நிலம் மகாராஷ்டிர அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 500 கோடியாகும்.
இதையும் படிங்க: இன்ஃபோசிஸ் தலைவர் சுதா மூர்த்தி திருப்பதி கோயிலுக்கு 'ரதம்' வழங்கினார்!