- அமெரிக்க அதிபர் பதவியேற்பு: அமெரிக்க அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் ஆகியோர் இன்று பதவியேற்க உள்ளனர். இதனால் தலைநகர் வாஷிங்டன் விழாக்கோலம் பூண்டுள்ளது.
- விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கடந்த 50 நாள்களாக தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடத்திய ஒன்பது பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் விவசாயிகளிடம் உச்ச நீதிமன்றம் அமைத்த கமிட்டி இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.
- ஸ்ரீராமானுஜர் கோயிலில் முதலமைச்சர் வழிபாடு: ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழிபாடு நடத்துகிறார். அவருக்கு கோயிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட உள்ளது.
- அமைச்சர் காமராஜ்க்கு தீவிர சிகிச்சை: கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பினால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உணவுத் துறை அமைச்சர் காமராஜை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டனர். அமைச்சர் காமராஜிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.
- திமுக எம்பி கனிமொழி பரப்புரை: திமுக மகளிரணி செயலர் கனிமொழி எம்பி கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் இன்று பரப்புரை செய்கிறார்.
- வடகிழக்கு பருவமழை நிறைவு: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்துவந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை நேற்றுடன் நிறைவுபெற்றது. இனி வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- திருப்பதி தரிசன டிக்கெட்டு வெளியீடு: திருப்பதி ஏழுமலையானை பிப்ரவரி மாதம் தரிசிப்பதற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் புதன்கிழமை (ஜன.20) காலை வெளியாகிறது. இந்தக் கட்டண முன்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கும்.
- சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பம்: சுற்றுச்சூழல், கல்வி, விழிப்புணர்வு, ஆராய்ச்சி, மேலாண்மை நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிவரும் தனிநபர்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, www.environmrnt.tn.gov.in என்ற இணைய முகவரியில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மார்ச் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- பொன். ராதாகிருஷ்ணன் உண்ணாவிரதம்: திருநெல்வேலி மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று காலை 6 மணிக்கு கலந்துகொள்கிறார்.
- டெல்லி செங்கோட்டையில் பார்வையாளர்களுக்கு தடை: டெல்லி செங்கோட்டையில் காகங்கள் பறவை காய்ச்சலால் இறந்த நிலையில் பார்வையாளர்களுக்கு வருகிற 26ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
- எகிறிய பெட்ரோல், டீசல் விலை: தேசிய தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85க்கு அதிகமாகவும், மும்பையில் 92ஐ நெருங்கியும் விற்பனையாகிறது. டீசல் முறையே ரூ.75, 83க்கு விற்பனையாகிவருகிறது.
- இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்: மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வேண்டி, திருத்துறைப்பூண்டில் 13 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.
- பிஎஸ்என்எல் குறைதீர்ப்பு கூட்டம்: பிஎஸ்என்எல் சார்பில் சென்னையில் வாடிக்கையாளர் குறைதீர்ப்பு மற்றும் திறந்தவெளிக்கூட்டம் புதன்கிழமை (ஜன.2) மதியம் 2.30 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
- மாற்றுத்திறனாளி வாக்காளர் சேர்ப்பு முகாம்: மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம், வியாழக்கிழமை (ஜன.21) தொடங்கி, ஜன.31ஆம் தேதி வரை 11 நாள்கள் நடக்கிறது என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான கோ. பிரகாஷ் அறிவித்துள்ளார்.
இன்றைய செய்திகள்- நிகழ்வுகளின் தாெகுப்பு - பிஎஸ்என்எல் குறைதீர்ப்பு கூட்டம்
இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை சுருக்கமாக காணலாம்.
Important national and state events to look for today Important national events today News Today அமெரிக்க அதிபர் பதவியேற்பு இன்றைய செய்திகள் விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை திருப்பதி தரிசன டிக்கெட்டு பிஎஸ்என்எல் குறைதீர்ப்பு கூட்டம் வாக்காளர் சேர்ப்பு முகாம்