பிகார் மாநிலத்தில் அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
தேர்தலுக்கு முந்தைய அறிவிப்பின்படி, ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரான நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அதேவேளை துணை முதலமைச்சராக பதவி வகித்த பாஜக தலைவர் சுஷில் மோடி மீண்டும் அப்பதவிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
அவருக்கு பதிலாக பாஜகவைச் சேர்ந்த தார்கிஷோர் பிரசாத், ரேனு தேவி ஆகிய இருவரும் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்படவில்லை. முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் மோடி பிகார் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக முன்னிறுத்தப்படவுள்ளார்.
பிகார் மாநில அரசியலில் நீண்ட காலமாக காலூன்றி வந்த சுஷில் மோடி தற்போது மாநில அரசியல் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றில் இருந்து தள்ளி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து அவர், ”பாஜக என்பது ஒருவழி பாதை கொண்ட கட்சி, இதில் வருபவர்கள் இங்கிருந்து திரும்பி செல்வது இயலாத காரியம். என்னால் பாஜக அரசாங்கத்தில் தற்போது நீடிக்க முடியவில்லை என்றாலும் எனது ஆன்மா இங்குதான் உள்ளது” என்றுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவை அடுத்து அவரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தற்போது காலியாக உள்ளது. அந்த பதவிக்கு, தான் தற்போது சுஷில் மோடி பாஜக சார்பில் போட்டியிடவுள்ளார்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக் இல்லா இந்தியா... தீவிரம் காட்டும் ரயில்வே