டெல்லி: 2019 மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவில் கோலார் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவதாக விமர்சித்திருந்தார். ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது பாஜகவினர் அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது.
முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் தனது தகுதி நீக்கம் தொடர்பாக ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "நான் நாட்டு மக்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறேன். அதற்காக எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தியின் பதவி பறிப்பு.. எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்..