சட்டவிரோதமாக நிலக்கரி வர்த்தகத்தில் ஈடுபட்ட வழக்கில் சிபிஐ அதிரடி சோதனை நடத்திவருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் மூன்று மாநிலங்களில் 40 இடங்களில் சிபிஐ இன்று சோதனை நடத்தியது. இது குறித்து சிபிஐ புதிய வழக்கைத் தொடர்ந்துள்ளது.
சிபிஐயின் அதிரடி சோதனை மேற்குவங்கத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றது. அடுத்தாண்டு, மேங்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிபிஐயின் இந்தச் சோதனை பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு ஏற்கனவே மேற்குவங்க அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது மேலும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.