ETV Bharat / bharat

ஐ.ஐ.டி மெட்ராஸுடன் இணைந்து தனியார் நிறுவனம் மின்சார பேட்டரி தயாரிப்பு - ஐஐடி மெட்ராஸ்

மின்சார வாகன சார்ஜர் தயாரிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான பிளக்ஸ் மார்ட், அடுத்த 3 ஆண்டுகளில் முற்றிலும் உள்நாட்டிலேயே 10 லட்சம் சார்ஜர் போர்ட்களை தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஐஐடி
ஐஐடி
author img

By

Published : Dec 20, 2022, 10:51 PM IST

சென்னை: ஐ.ஐ.டி. மெட்ராஸுடன் இணைந்து பிளக்ஸ்மார்ட் ஸ்மார்ட் மின்சார பேட்டரி தயாரிப்பு நிறுவனம், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி நிலையத்தை உருவாக்க ரூ.3 கோடியே 63 லட்சம் நிதி திரட்டி உள்ளது.

ஸ்டார்ட்அப் நிறுவனமான பிளக்ஸ்மார்ட், அடுத்த 3 ஆண்டுகளில் முற்றிலும் உள்நாட்டிலேயே 10 லட்சம் சார்ஜர் போர்ட்களை தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டு ஒரு மில்லியன் சார்ஜிங் போர்ட்களை அமைக்கத் தேவையான பணிகளை மேற்கொள்ள, கிடைத்த 3 கோடியே 63 லட்ச ரூபாய் நிதியை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு செலவழிக்க உள்ளதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து பேட்டரி சார்ஜிங் தயாரிப்பு ஆய்வில் ஈடுபட்ட பிளக்ஸ்மார்ட் நிறுவனம், இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான மின்சார பேட்டரி மற்றும் சார்ஜிங் போர்ட்டுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

விவேக் சுவாமிநாதன் மற்றும் ராகவேந்திரா ரவிச்சந்திரன் ஆகியோரால் பிளக்ஸ்மார்ட் நிறுவனம் தொடங்கப்பட்ட நிலையில், ஏசி மற்றும் டிசி மோட்டார் என அந்தந்த மின்அலைகளுக்கு ஏற்ப வெவ்வேறு ஆற்றல் வரம்புகளுக்குள் இயங்கக்கூடிய 9 வகையான சார்ஜர் மற்றும் போர்ட்களை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பயங்கரவாத செயல்களுக்கு PFI ஆள் திரட்டியதாக குற்றச்சாட்டு - NIA அறிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.