இது குறித்து கவுகாத்தி காவலர்கள், "ஐஐடி கவுகாத்தியில் மார்ச் 28ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது மாணவி ஒருவர் விடுதி அறையில் மயக்க நிலையில் கிடந்துள்ளார்.
சக மாணவிகள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவப் பரிசோதனையில், மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில், ஐஐடியில் பயிலும் சக மாணவர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாணவியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் விரைவில் அறிக்கை வெளியிடுவர்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: டியூஷன் சென்ற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை?