இந்தியாவின் தலைசிறந்த 10 உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை இந்திய கல்வி அமைச்சகம் இன்று (ஜூலை 15) வெளியிட்டுள்ளது. அதில், சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. பெங்களூரு ஐஐஎஸ்சி மற்றும் மும்பை ஐஐடி முறையே இரண்டாவது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.
கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், மருத்துவ உயர் கல்வி நிலையங்களில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி முதலிடத்தையும், சண்டிகர் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இரண்டாம் இடத்தையும், வேலூர் கிறுஸ்த்துவ மருத்துவ கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
ஆராய்ச்சி உயர் கல்வி நிலையங்களில், பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடத்தையும், மெட்ராஸ் ஐஐடி இரண்டாம் இடத்தையும், டெல்லி ஐஐடி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. பல் மருத்துவ உயர் கல்வி நிலையங்களில், சென்னை சவிதா மருத்துவக் கல்லூரி முதலிடத்திலும், மணிப்பால் மருத்துவக் கல்லூரி இரண்டாம் இடத்திலும், புனே டாக்டர் பட்டீல் மருத்துவக் கல்லூரி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க: அனைவருக்கும் சமமான கல்வி ஏற்படுத்திதர வேண்டும்- காமராஜர் பேத்தி வலியுறுத்தல்