திருமலை: திருப்பதி தேவஸ்தானம் இளைஞர்களை கோவிந்தா என்ற வார்த்தையை எழுத ஊக்குவிப்பதற்காக பல்வேறு வழிகளை ஏற்படுத்தியுள்ளது. தேவஸ்தான சேர்மன் கருணாகர ரெட்டி தலைமையில் திருமலா அன்னமய்யா கட்டிடத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இரண்டு அல்லது மூன்று கோவிந்த ராஜஸ்வாமி கட்டிடங்களை அகற்றி 600 கோடி செலவில் பக்தர்கள் தங்குவதற்காக காம்ப்ளக்ஸ் கட்ட முடிவு செய்யப்பட்டது.
மேலும் இளைஞர்கள் மத்தியில் இந்து மதம் மற்றும் தர்மத்தை வளர்க்க பல்வேறு முக்கிய முடிவுகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தேவஸ்தான சேர்மன் கருணாகர ரெட்டி கூறினார். திருப்பதி தேவஸ்தான அலுவலர் இளைஞர்களிடையே பக்தி உணர்வை வளர்க்க 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கோவிந்தா என்ற வார்த்தை எழுத ஊக்குவிக்கப்படுவார்கள்.
கோவிந்தா என்ற வார்த்தையை 1 கோடியே 116 முறை எழுதும் இளைஞர்களுக்கு அவர்கள் குடும்பத்துடன் விஐபி டிக்கெட்டில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த வருடம் பிரம்மோத்ஸவ காலத்தில் அமாவாசை வருவதால் இந்த முறை திருப்பதி வெங்கடாசலபதிக்கு இரண்டு பிரம்மோத்ஸவம் நடைபெறும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் பக்தர்களுக்கான தரிசனம் மற்றும் தங்கும் வசதி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது என கருணாகர ரெட்டி கூறினார். மாநில அரசு சார்பில் திருப்பதி வெங்கடாசலபதிக்கு வரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வெள்ளி ஆடையை அளிக்கவுள்ளார்.
சந்திரகிரி மூலஸ்தான கோயில் 2 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படும் எனவும், மும்பையில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் 5 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படும் எனவும், 49.50 கோடி ரூபாய் செலவில் திருப்பதி தேவஸ்தான அலுவலர்களுக்கான குவாட்டர்ஸ் புதுப்பிக்கப்படும் எனவும் கூறினார். மேலும் ஆந்திர அரசிடம் அனுமதி கேட்டு திருப்பதி லட்டு அலுவலகத்தில் பணிபுரிய 413 பேரை புதியதாக நியமனம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: Rahul Gandhi: ஒரு வாரம் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி.. பின்னணி என்ன?