மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. முதலமைச்சர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ள சுவேந்து, கடந்த முறை நந்திகிராம் தொகுதியில் வெற்றிபெற்றவர். சுவேந்து அதிகாரி தனது தொகுதியில் அவரின் முன்னாள் தலைவரும், முதலமைச்சருமான மம்தாவை எதிர்கொள்வது, அங்குள்ள அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சுவேந்து அதிகாரி, "மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சிக்குவந்தால் மேற்கு வங்கம் காஷ்மீராக மாறிவிடும். நந்திகிராம் எனக்கு போட்டியே அல்ல. நந்திகிராமில் மம்தாவை தோற்கடித்து கொல்கத்தாவிற்கே திரும்ப அனுப்புவோம். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் மம்தாவை தோற்கடிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் நாளை தொடக்கம்