மும்பை நகரில் கோவிட் தடுப்பு நடவடிக்கை தொடர்பான பொதுநல வழக்கு மும்பை உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மும்பை மாநகராட்சி நிர்வாகம் தடுப்பூசி திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டிருந்தது.
அதில், ”மூத்த குடிமக்கள் தடுப்பூசி மையங்களுக்கு வந்து ஊசி செலுத்திக் கொள்வதில் சிரமம் உள்ளது. எனவே, அவர்களுக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளது.
அதற்கு பதிலளித்துள்ள நீதிமன்றம், திட்டத்திற்காக ஏற்பாடு தயாராக இருந்தால் அதை உடனடியாக செயல்படுத்தலாம். மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டாம் எனக் கூறியுள்ளது. மேலும், இதுபோன்ற அவசர காலகட்டத்தில் மக்கள் நலனே பிரதானம் எனவும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: ’பேசக்கூடாது என்றால் எதற்கு கூட்டம்...’ - பிரதமர் மோடிக்கு மம்தா சுளீர் கேள்வி!