ஜோத்பூர்: கரோனாவைக் கட்டுப்படுத்தும்விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மறுபக்கம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுவருகிறது.
அதுமட்டுமல்லாமல், ஜோத்பூர் மருத்துவமனைகளில் அதிகரித்துவரும் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக, குஜராத்தின் ஜாம்நகரிலிருந்து 30 முதல் 40 கிலோ லிட்டர் ஆக்சிஜன் அளவை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இதற்காக ஆக்சிஜனைக் கொண்டுசெல்ல இந்திய விமான படை போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இந்தப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய விமான படை (ஐ.ஏ.எஃப்.) திரவ ஆக்சிஜன் டேங்கர்களை மீண்டும் நிரப்பவும் விநியோகத்தை விரைவுப்படுத்தவும் முன்வந்துள்ளது. இந்திய விமான படையின் சி -17 ஹெவி-லிஃப்ட் இன்று (ஏப்ரல் 24) இரண்டு திரவ ஆக்சிஜன் டேங்கர்களை குஜராத்தின் ஜாம்நகருக்கு ராஜஸ்தானின் ஜோத்பூர் விமானத்தில் கொண்டுசென்றது.
இதையும் படிங்க : ஆக்ஸிஜன் தேவைக்கு 104 என்ற எண்ணை அழையுங்கள்- தமிழ்நாடு அரசு தகவல்