பெங்களூரு: கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் காங்கிரஸ் 136 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக 65 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே, பல்வேறு கருத்துக் கணிப்புகளும், காங்கிரஸ் வெற்றிபெறும் என்றே கூறின.
இந்நிலையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறுகையில், "சட்டமன்றத் தேர்தலில் பாஜக அடைந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். தோல்விக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தொண்டர்கள் முழு முயற்சி மேற்கொண்டும், எங்களால் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற முடியவில்லை. தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு, அதுகுறித்து ஆராய்வோம். எந்த இடத்தில் பலவீனமாக இருக்கிறோமோ, அதை சரி செய்வோம்" எனக் கூறியுள்ளார்.
-
ನಾವು ಕರ್ನಾಟಕದ ಜನತೆಯ ತೀರ್ಪನ್ನು ಗೌರವದಿಂದ ಸ್ವೀಕರಿಸುತ್ತೇವೆ. ನಾವು ನಮ್ಮ ತಪ್ಪುಗಳನ್ನು ವಿಶ್ಲೇಷಿಸಿ, ಸರಿಪಡಿಸಿಕೊಂಡು, ಪಕ್ಷವನ್ನು ಪುನಃ ಸಂಘಟಿಸಿ, ಸಂಸತ್ ಚುನಾವಣೆಯ ವೇಳೆಯಲ್ಲಿ ಮತ್ತೊಮ್ಮೆ ಪುನರಾಗಮಿಸುತ್ತೇವೆ.
— Basavaraj S Bommai (@BSBommai) May 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
We accept the verdict of people of Karnataka with due respect, we will take this verdict in our…
">ನಾವು ಕರ್ನಾಟಕದ ಜನತೆಯ ತೀರ್ಪನ್ನು ಗೌರವದಿಂದ ಸ್ವೀಕರಿಸುತ್ತೇವೆ. ನಾವು ನಮ್ಮ ತಪ್ಪುಗಳನ್ನು ವಿಶ್ಲೇಷಿಸಿ, ಸರಿಪಡಿಸಿಕೊಂಡು, ಪಕ್ಷವನ್ನು ಪುನಃ ಸಂಘಟಿಸಿ, ಸಂಸತ್ ಚುನಾವಣೆಯ ವೇಳೆಯಲ್ಲಿ ಮತ್ತೊಮ್ಮೆ ಪುನರಾಗಮಿಸುತ್ತೇವೆ.
— Basavaraj S Bommai (@BSBommai) May 13, 2023
We accept the verdict of people of Karnataka with due respect, we will take this verdict in our…ನಾವು ಕರ್ನಾಟಕದ ಜನತೆಯ ತೀರ್ಪನ್ನು ಗೌರವದಿಂದ ಸ್ವೀಕರಿಸುತ್ತೇವೆ. ನಾವು ನಮ್ಮ ತಪ್ಪುಗಳನ್ನು ವಿಶ್ಲೇಷಿಸಿ, ಸರಿಪಡಿಸಿಕೊಂಡು, ಪಕ್ಷವನ್ನು ಪುನಃ ಸಂಘಟಿಸಿ, ಸಂಸತ್ ಚುನಾವಣೆಯ ವೇಳೆಯಲ್ಲಿ ಮತ್ತೊಮ್ಮೆ ಪುನರಾಗಮಿಸುತ್ತೇವೆ.
— Basavaraj S Bommai (@BSBommai) May 13, 2023
We accept the verdict of people of Karnataka with due respect, we will take this verdict in our…
பிறகு டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "கர்நாடகா மாநில மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். எங்களது தவறுகளை திருத்திக் கொண்டு, கட்சியை வலுப்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தேர்தலைப் பொறுத்தவரை ஒக்கலிகர், பட்டியல் சமூக வாக்குகளை பாஜக பெரிய அளவில் பெறவில்லை என்பதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்?: சித்தராமையா - டி.கே.சிவகுமார் இடையே போட்டி!