ETV Bharat / bharat

வரலாற்று வெற்றிக்காக குஜராத் மக்களுக்கு தலைவணங்குகிறேன் - பாஜக தலைவர் அமித் ஷா

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை கொடுத்த மாநில மக்களுக்கு தலைவணங்குகிறேன் என்று பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்தார்.

பாஜக தலைவர் அமித் ஷா
bjp leader amit shah
author img

By

Published : Dec 8, 2022, 2:36 PM IST

Updated : Dec 8, 2022, 2:44 PM IST

டெல்லி: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவில் பாஜக 152 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது. பாஜகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதுகுறித்து பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த வரலாற்று வெற்றிக்காக குஜராத் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு தலைவணங்குகிறேன்.

அதேபோல, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், பாஜக மாநில தலைவர் சிஆர் பாட்டீல் மற்றும் குஜராத் மாநில பாஜக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். வெற்றிக்காக பொய்யான வாக்குறுதிகள் கொடுக்கும் துரோக அரசியவாதிகளை குஜராத் நிராகரித்துள்ளது.

வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக பாடுபடுபவர்கள் அரவணைத்துள்ளது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் முழு மனதுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். கடந்த 20 ஆண்டுகளாக மோடியின் தலைமையிலான குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியும், சாதனையும் மாநில மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வீடியோ: குஜராத்தில் கொண்டாட்டத்தை தொடங்கிய காவிகள்

Last Updated : Dec 8, 2022, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.