பெங்களூரு: கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 66 இடங்களை மட்டும் பிடித்துள்ளது. காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைய உள்ள நிலையில் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இடையே முதலமைச்சர் பதவிக்கான போட்டி ஏற்பட்டுள்ளது.
அடுத்த முதலமைச்சர் சித்தராமையா தான் என அவரது ஆதரவாளர்கள் பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இதேபோல், டி.கே.சிவகுமார் தான் அடுத்த முதலமைச்சர் என அவரது ஆதரவாளர்களும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்நிலையில் ஹரிஹரபுரா மடத்தில் இருந்து ஒக்காலிக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெங்களூருவில் உள்ள டி.கே.சிவகுமார் வீட்டுக்குச் சென்று அவரை வாழ்த்தினர். மேலும், அடுத்த முதலமைச்சர் தாங்கள் தான் என்றும் அவருக்கு ஆசி வழங்கினர்.
-
This Mutt is a holy place for me. Swamiji has always guided me. Swamiji Gave me complete guidance even when the Income Tax raids took place. I asked for 134 seats and I got more than that: Karnataka Congress president DK Shivakumar pic.twitter.com/uGnF8aIEBb
— ANI (@ANI) May 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This Mutt is a holy place for me. Swamiji has always guided me. Swamiji Gave me complete guidance even when the Income Tax raids took place. I asked for 134 seats and I got more than that: Karnataka Congress president DK Shivakumar pic.twitter.com/uGnF8aIEBb
— ANI (@ANI) May 14, 2023This Mutt is a holy place for me. Swamiji has always guided me. Swamiji Gave me complete guidance even when the Income Tax raids took place. I asked for 134 seats and I got more than that: Karnataka Congress president DK Shivakumar pic.twitter.com/uGnF8aIEBb
— ANI (@ANI) May 14, 2023
இதைத் தொடர்ந்து லிங்காயத் சமூகத்தவர்களுக்கு சொந்தமான சித்தகானா மடத்துக்குச் சென்ற டி.கே.சிவகுமார், அங்குள்ள மடாதிபதிகளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் தும்கூர் மாவட்டத்தில் உள்ள நோனவிநாகேரா பகுதிக்கு குடும்பத்தினருடன் சென்ற சிவகுமார், ஆன்மிக குரு அஜ்ஜையாவை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "எனக்கும், சித்தராமையாவுக்கும் பிரச்னைகள் இருப்பதாக சிலர் எண்ணுகின்றனர். எனக்கும், அவருக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. கட்சிக்காக பல முறை நான் தியாகம் செய்திருக்கிறேன். சித்தராமையாவுடன் இணைந்து செயல்பட்டுள்ளேன்.
-
#WATCH | Tumkuru: Karnataka Congress president DK Shivakumar along with his family visited Nonavinakere Kadasiddeshwara Mutt to take the blessings of Vrishabha Deshikendra Seer after winning the elections. pic.twitter.com/rGKYnlrRZO
— ANI (@ANI) May 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Tumkuru: Karnataka Congress president DK Shivakumar along with his family visited Nonavinakere Kadasiddeshwara Mutt to take the blessings of Vrishabha Deshikendra Seer after winning the elections. pic.twitter.com/rGKYnlrRZO
— ANI (@ANI) May 14, 2023#WATCH | Tumkuru: Karnataka Congress president DK Shivakumar along with his family visited Nonavinakere Kadasiddeshwara Mutt to take the blessings of Vrishabha Deshikendra Seer after winning the elections. pic.twitter.com/rGKYnlrRZO
— ANI (@ANI) May 14, 2023
சுவாமி அஜ்ஜையா தான் என்னை வழிநடத்துகிறார். வருமான வரித்துறை சோதனையின்போது அவர் எனக்கு வழிகாட்டினார். காங்கிரஸ் கட்சி 134 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என வேண்டினேன். ஆனால், அதற்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: Karnataka முதலமைச்சர் யார்? என்ன நடக்கிறது - முழுப் பின்னணி!