டெல்லி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை இன்று (அக் 30) நடைபெறுகிறது. இந்த நாளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தியும், புகழாரம் தெரிவித்தும் வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ரவி உள்ளிட்டோர் புகழாரம் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'தென்னகத்து போஸ்' முத்துராமலிங்கத் தேவர் - ஸ்டாலின் புகழாரம்