ETV Bharat / bharat

பாக். ஆதரவு கருத்து: இந்தியா சம்மன் அனுப்பிய எதிரொலி - ஹுண்டாய் வருத்தம்

author img

By

Published : Feb 10, 2022, 12:22 PM IST

காஷ்மீர் குறித்த பாகிஸ்தானுக்கு ஆதரவான பாகிஸ்தானிய விநியோகஸ்தரின், 'அங்கீகரிக்கப்படாத' ட்விட்டர் கருத்து குறித்து வருத்தம் தெரிவித்த ஹுண்டாய் மோட்டார் நிறுவனம், அரசியல், மத விவகாரங்களில் தங்கள் நிறுவனம் கருத்து சொல்லாது என அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

ஹுண்டாய் வருத்தம்
ஹுண்டாய் வருத்தம்

டெல்லி: இந்தியர்களுக்கு எதிரான காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தான் ஹுண்டாய் நிறுவனத்தின் 'அங்கீகரிக்கப்படாத' ட்விட்டர் பதிவு குறித்து அந்நிறுவனம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தென்கொரிய நிறுவனமான ஹுண்டாய் கடந்த 8ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "எந்தவொரு குறிப்பிட்ட பிராந்தியம் தொடர்பான அரசியல் அல்லது மத விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதில்லை என்பது ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்தில் வணிகக் கொள்கையாகும்.

இதுபோன்று எதிர்காலத்தில் நிகழாது

அதனால் இந்த விவகாரம் ஹுண்டாய் மோட்டார் கொள்கைக்கு முற்றிலும் முரணானது என்பது தெளிவாகிறது. அந்தப் பதிவை பாகிஸ்தானிய விநியோகஸ்தர் தனது சொந்தப் பதிவாக இட்டுள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனம், இந்த விவகாரம் எங்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றது.

"பொருத்தமற்ற இந்தச் செயலின் தீவிரம் குறித்து விநியோகஸ்தரை எச்சரித்தோம். ஹுண்டாய் பிராண்டின் அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தி விநியோகஸ்தர் சமூக வலைதள இடுகைப் பதிவுகளை நீக்குவதை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இதுபோன்று எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்கு முன்னெச்சரிக்கை செயல்முறைகளை நாங்கள் வகுத்துள்ளோம். எங்களுடைய துணை நிறுவனமான ஹுண்டாய் மோட்டார் இந்தியா, பாகிஸ்தானுடன் தொடர்புடையது அல்ல. வணிகம் தொடர்புடையது அல்லாத விநியோகஸ்தரின் அங்கீகரிக்கப்படாத சமூக ஊடக செயல்பாட்டை நாங்கள் உறுதியுடன் நிராகரிக்கிறோம்.

ஹுண்டாய் ஆழ்ந்த வருத்தம்

இந்தியாவில் ஹுண்டாய் நிறுவனம் பல தசாப்தங்களாக முதலீடு செய்துவருகிறது. மேலும் வாடிக்கையாளர்களுடனான உறுதியான உறவு நீடிக்கிறது. இந்த அங்கீகாரமற்ற சமூக வலைதளப் பதிவால் இந்திய மக்களின் மனங்கள் புண்பட்டிருந்தால் அதற்காக எங்களது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தென்கொரிய தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பிய நிலையில், இந்த அறிக்கையை ஹுண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கீழே இருக்கிற சக்கரம் மேலே வரும் - காவல் துறையினருக்கு எடப்பாடி எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.