ஒமைக்ரான் வைரஸின் மாறுபாடுகளான பிஏ1, பிஏ 2, எக்ஸ்.இ உள்ளிட்ட வைரஸ்கள் பரவி வரும் நிலையில், பிஏ4 வகை வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்தியாவில் பிஏ4 மாறுபாடு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்தியாவில் முதல் பிஏ.4 வகை ஒமைக்ரான் வைரஸ் தொற்று ஹைதராபாத்தில் கண்டறியப்பட்டதாகவும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மருத்துவர் ஒருவருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் இந்த தொற்று பாதிக்கும் என ஐசிஎம்ஆர் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இந்த தொற்று பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது எனவும், அதே நேரம் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஏ4 மாறுபாடு வேகமாக பரவும் தன்மை கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் இருவருக்கு புதிய வகை ஒமைக்ரான் தொற்று