ETV Bharat / bharat

தொடர் கொள்ளைக் குற்றவாளி கைது: ரூ.18.50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்!

author img

By

Published : Nov 14, 2020, 7:42 AM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.

தொடர் குற்றவாளி கைது
தொடர் குற்றவாளி கைது

தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தைச் சேர்ந்தவர் அப்தாப் அஹ்மத் ஷேக் (39). இவர், பழங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். மேலும், இவர் பல திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளார்.

இவர் மீது, 2007 ஆம் ஆண்டு முதல் ஹைதராபாத் கமிஷனரேட், நிஜாமாபாத், கரீம்நகர் ஆகிய மாவட்டங்களிலுள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவர் பாலியல் வன்புணர்வு வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு, மகாராஷ்டிராவின் கோலாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பல நாள்களாக ஹைதரபாத் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த அப்தாப் அஹ்மத் ஷேக்-ஐ காவல்துறையினர் நேற்று (நவ.13) கைது செய்தனர். அவரிடமிருந்து 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், தங்க ஆபரணங்கள், இருசக்கர வாகனம், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: கேரளாவைச் சேர்ந்த ஹவாலா கும்பல் சிக்கியது - அமலாக்கத்துறை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.