தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். குறிப்பாக ஹைதராபாத், செகந்திராபாத், மாதாப்பூர் பகுதிகளில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டும். இந்த சிலைகள் அனைத்தும் நகரின் மையப்பகுதியில் உள்ள உசேன் சாகர் ஏரியில் கரைக்கப்படும்.
இந்த விழாவில் ஹைதராபாத்தின் பாலாபூரில் வைக்கப்படும் விநாயகர் சிலை தனித்துவம் பெற்றதாகும். அதாவது பாலாபூரில் வைக்கப்படும் விநாயகருக்கு படைக்கப்படும் லட்டு ஏலத்தில் விடப்படுகிறது. அந்த ஒரு லட்டு பல லட்சம் ரூபாய்க்கு ஆண்டுதோறும் ஏலமாகிறது. முதல் முதலில் இந்த ஏலம் 1994ஆம் ஆண்டு தொடங்கியது.
![Hyderabad Balapur Ganesh Balapur Ganesh laddu Balapur Ganesh laddu auction laddu auction பாலாபூர் கணேஷ் ஐதரபாத் பாலாபூர் கணேஷ் லட்டு பாலாபூர் கணேஷ் லட்டு பாலாபூர் கணேஷ் லட்டு ஏலம் லட்டு ஏலம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16331509_ladu.png)
அப்போது அந்த லட்டு ரூ.450-க்கு ஏலமானது. அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் போட்டி போட்டு லட்சக் கணக்கில் பணத்தை கொடுத்து வாங்க தொடங்கினர். அதன்படி 2004ஆம் ஆண்டு, ரூ. 2 லட்சத்து 1 ஆயிரத்திற்கு ஏலம் போனது. பின்னர் 2010ஆம் ஆண்டு ரூ.10 லட்சத்து 36 ஆயிரத்திற்கு ஏலம் போனது. 2016ஆம் ஆண்டு ரூ.14 லட்சத்து 65 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
அதன்பின் கடந்தாண்டு ரூ.19 லட்சத்து 80 ஆயிரத்திற்கு ஏலம் போன நிலையில், இந்தாண்டில் ரூ.24 லட்சத்து 60 ஆயிரத்திற்கு ஏலம் போனது. இதனை வாங்கெட்டி லக்ஷ்மரெட்டி என்பவர் வாங்கியுள்ளார்.