அலிகார்: உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும், டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அமித் என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து தம்பதிகள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கணவர் அமித்திடம் இருந்து விவாகரத்து கோரியும், தனக்கு தேவையான ஜீவனாம்சத் தொகையை பெற்றுத் தரக் கோரியும் பெண் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்ற விசாரணையில், பியூட்டி பார்லர் செல்லவும், வீட்டு செலவுகளுக்கு தேவையான பணம் தராததாலும் அமித்தை விவாகரத்து செய்வதாக பெண் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கணவன், மனைவி இருவரையும் கவுன்சிலிங் செல்ல அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: Sikkim tragedy: விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 16 பேர் பலி