குஜராத்: சூரத் நகரில் உள்ள உதானா பகுதியில் வசித்து வந்தவர், ரோகித் சிங். ஜவுளி துறையில் பணியாற்றி வந்த அவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் தான் இறப்பதற்கு முன் பேஸ்புக்கில் இறப்புக்கான காரணம் குறித்து பதிவிட்டுள்ளார். அதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
27 வயதான ரோகித் சிங் தன்னுடன் பணியாற்றிய 30 வயதான இஸ்லாமியப்பெண்மணி சோனம் என்பவருடன் காதல் வயப்பட்டு , வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது வீட்டில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட சண்டையினால் , இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
திருமணமான சிறிது நாட்களில் மனைவி சோனம், தனக்கு விரும்பாத அசைவ உணவுகளை சமைத்து கட்டாயப்படுத்தி கொடுத்ததாக ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதே பிரச்னை நாளுக்கு நாள் தொடரவே எங்கு தன்னை மதம் மாற்றி விடுவார்களோ என்ற அச்சம் ரோகித்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஒரு நாள் ரோகித்திற்கு, சோனம் மாட்டுக்கறியை உணவாக கொடுத்துள்ளார். சாப்பிட மறுப்பு தெரிவித்தபோது, சோனம் தனது அண்ணன் மூலம் ரோகித்தை மிரட்டியுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான ரோகித் தற்கொலை செய்து கொள்ளும் முன், ஃபேஸ்புக்கில் தனக்கு ஏற்பட்ட இன்னல்களைப் பதிவிட்டு சென்றுள்ளார்.
நீண்ட நாட்களாக இந்த விவகாரம் வெளிவராத நிலையில் , ரோகித்தின் நண்பர் அவரது பதிவை படித்து விட்டு , ரோகித்தின் குடும்பத்திடம் சென்று விவரித்துள்ளார். இதையடுத்து சம்பவம் குறித்து ரோகித்தின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சோனம், ரோகித் இறந்ததை அவரது குடும்பத்தாரிடமே பொய் சொல்லி மறைத்தது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தன் மனைவி மற்றும் குழந்தைகளை மதம் மாற்றியதால் தற்கொலை முயற்சி செய்த கணவர்