டெல்லி: G20 மாநாட்டில் மருத்துவ அவசர உதவிகளுக்காக அதிநவீன உயிர் காக்கும் வசதிகளுடன் 80 மருத்துவக் குழுக்கள், 130 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. இவை விவிஐபிகள் செல்லும்போது உடன் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, ஐந்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மூன்று தனியார் மருத்துவமனைகள் உயர் விழிப்புடன் செயல்படுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
-
दिल्ली में जितना भी सौंदर्यीकरण का काम हुआ है, उसका ज्यादातर हिस्सा दिल्ली सरकार के PWD विभाग और MCD ने किया है।
— AAP (@AamAadmiParty) September 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
MCD ने बहुत सारी Markets में अच्छा काम किया है।
G20 Park तैयार किया गया है।
Waste से खूबसूरत Sculptures बनाये गए हैं।
CM @ArvindKejriwal और 2 करोड़ लोगों की तरफ से… pic.twitter.com/kYMv3tJyV4
">दिल्ली में जितना भी सौंदर्यीकरण का काम हुआ है, उसका ज्यादातर हिस्सा दिल्ली सरकार के PWD विभाग और MCD ने किया है।
— AAP (@AamAadmiParty) September 6, 2023
MCD ने बहुत सारी Markets में अच्छा काम किया है।
G20 Park तैयार किया गया है।
Waste से खूबसूरत Sculptures बनाये गए हैं।
CM @ArvindKejriwal और 2 करोड़ लोगों की तरफ से… pic.twitter.com/kYMv3tJyV4दिल्ली में जितना भी सौंदर्यीकरण का काम हुआ है, उसका ज्यादातर हिस्सा दिल्ली सरकार के PWD विभाग और MCD ने किया है।
— AAP (@AamAadmiParty) September 6, 2023
MCD ने बहुत सारी Markets में अच्छा काम किया है।
G20 Park तैयार किया गया है।
Waste से खूबसूरत Sculptures बनाये गए हैं।
CM @ArvindKejriwal और 2 करोड़ लोगों की तरफ से… pic.twitter.com/kYMv3tJyV4
G20 மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், ஐரோப்பியா ஒன்றியத்தில் உச்சபட்ச அதிகாரிகள் மற்றும் 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “டெல்லி அரசு அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மேலும், மருத்துவ அவசர நிலையை எதிர் கொள்ள அதிநவீன உயிர்காக்கும் கருவிகள் மற்றும் அனுபவமிக்க மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விவிஐபிகள் தங்கியுள்ள ஹோட்டல்களில் அவசர நிலைக்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட 80 குழுக்கள் சுகாதாரத் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 75 குழுக்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
G20 மாநாட்டின்போது 70 உயர்ரக மற்றும் 60 அனைத்து வசதிகளும் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும். மேலும், ஐந்து அரசு மருத்துவமனைகள் உயர் விழிப்புடன் தயார் நிலையில் இருக்கும். இதில், லோக் நாயக் மருத்துவமனை, ஜிபி பந்த் மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை, தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் மருத்துவமனை அடங்கும். இது தவிர 3 தனியார் மருத்தவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதில், ப்ரைமஸ் மருத்துவமனை - சாணக்யபுரி, மேக்ஸ் மருத்துவமனை - சாகேத் மற்றும் மணிபால் மருத்துவமனை - துவாரகா ஆகும்.
விவிஐபி விருந்தினர்கள் தங்கும் விடுதிகளுக்கு அருகில் மருத்துவமனைகள் வேண்டும் என்பதற்காக தனியார் மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
G20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தின் வளாகத்தின் உள்ளே அதிநவீன மருத்துவ வசதிகள் கொண்ட ICU அமைக்கப்பட்டுள்ளது. இந்த எற்பாடுகளை ராம் மஹோஹர் லோஹியா மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவை தவிர மற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் அவசர நிலையைச் சமாளிக்க ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ அவசர ஆம்புலன்ஸ்கள் விரைவாக செல்ல டெல்லி காவல் துறையினர் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
மேலும், மருத்துவ அவசர உதவிகளுக்காக செப்டம்பர் 7ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அவசர உதவி எண்களாக 6828400604 மற்றும் 112 ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், அவசரகால வாகனங்கள் செல்ல எந்த தடையும் இல்லை என்றும், அவற்றின் இயக்கம் எளிதாக்கப்படும் என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: “பிரம்மாண்ட நடராஜர் சிலை இந்தியாவின் கலைத்திறனுக்கு ஒரு சான்றாக அமையும்" - பிரதமர் மோடி பெருமிதம்!