ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சொப்னலோக்(Swapnalok) பகுதியில் பிரபல வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள், குடோன்கள் செயல்பட்டு வருகின்றன. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் சுமார் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழன் மாலை சுமார் 6 மணிக்கு ஏழாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்சார வயர்கள் மூலம் தீ மளமளவென பரவி 4 மற்றும் ஐந்தாவது மாடியிலும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் தீ விபத்தால் அலறியடித்தபடி அங்கிருந்து வெளியேறினர்.
சம்பவ இடத்தில் குவிந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க போராடினர். 8வது மாடியில் சிக்கிக்கொண்ட பணியாளர்களின் அலறல் சத்தத்தால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. மாடியில் சிக்கியவர்கள் ஹைட்ராலிக் கிரேன் மூலம் மீட்கப்பட்டனர்.
அதில் பலரது நிலைமை மோசமாக இருந்ததால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மகாத்மா காந்தி மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படனர். இந்த கோர விபத்தில் தற்போது வரை 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Reached the fire accident spot in Swapnalok complex engulfed in flames, closely monitoring the rescue operations along with @Director_EVDM and @CEC_EVDM disaster management teams. Will investigate the cause of the fire accident. @KTRBRS @GHMCOnline @IPRTelangana pic.twitter.com/7BHscZovYg
— Vijayalaxmi Gadwal, GHMC MAYOR (@GadwalvijayaTRS) March 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Reached the fire accident spot in Swapnalok complex engulfed in flames, closely monitoring the rescue operations along with @Director_EVDM and @CEC_EVDM disaster management teams. Will investigate the cause of the fire accident. @KTRBRS @GHMCOnline @IPRTelangana pic.twitter.com/7BHscZovYg
— Vijayalaxmi Gadwal, GHMC MAYOR (@GadwalvijayaTRS) March 16, 2023Reached the fire accident spot in Swapnalok complex engulfed in flames, closely monitoring the rescue operations along with @Director_EVDM and @CEC_EVDM disaster management teams. Will investigate the cause of the fire accident. @KTRBRS @GHMCOnline @IPRTelangana pic.twitter.com/7BHscZovYg
— Vijayalaxmi Gadwal, GHMC MAYOR (@GadwalvijayaTRS) March 16, 2023
சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்ட அமைச்சர்கள் முகமது அலி, ஸ்ரீனிவாஸ் யாதவ் மற்றும் மேயர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சையில் உள்ளோர் நிலை குறித்து கேட்டறிந்தனர். உயிரிழந்த 6 பேரின் உடல்கள் மகாத்மா காந்தி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: குடிபோதையில் திருமணத்தை மறந்த மணமகன்: மணமகள் எடுத்த அதிரடி முடிவு!