ETV Bharat / bharat

தெலங்கானாவில் பயங்கர தீ விபத்து.. 20 கட்டடங்கள் சேதம்.. ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசம்..

தெலங்கானாவின் செகந்திராபாத்தில் இயங்கி வரும் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து
தீ விபத்து
author img

By

Published : Jan 20, 2023, 12:19 PM IST

Updated : Jan 20, 2023, 12:33 PM IST

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நல்லகுட்டா பகுதியில் பிரபலமான தனியார் வணிக வளாகம் உள்ளது. அங்கு இயங்கி வரும் விளையாட்டு சாதனங்கள் விற்பனை கூடத்தில் நேற்று (ஜன 19) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காலை 10:30 மணி அளவில் ஏற்பட்ட தீ, இரவு வரை நீடித்தது.

இதனால் அக்கம்பக்கத்தில் உள்ள சுமார் 20 கட்டடங்களில் தீ பரவின. இந்த விபத்து காரணமாக நூற்றுக் கணக்கான மக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். வளாகத்துக்குள் சிக்கிய 6 பேரை மீட்கும் பணியில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின் கிரேன் உதவியுடன் 6 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்ட உடன் வணிக வளாகம் மற்றும் அருகில் இருந்த கட்டடங்களில் மக்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட தகவலில் மின்கசிவால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: நடனமாட மறுத்ததாக சிறுமியை தீ வைத்து கொல்ல முயற்சி .. பீகாரில் கொடூரம்!

Last Updated : Jan 20, 2023, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.