கர்நாடகா மாநிலம் ஹூப்ளியை சேர்ந்த ஷைலஜா ஸ்ரீராம் பாகடே, பியூட்டிஷியன் போட்டியில் கலந்துக்கொண்டு மணப்பெண் அலங்காரத்தை குறைவான நேரத்தில் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மணப்பெண் அலங்காரத்தை 45 நிமிடங்களில் செய்து முடிக்க வேண்டும் எனக் கடந்தாண்டு டிசம்பர் 20 ஆம் தேதி, பீசா சர்வதேச அழகு தீர்வு மற்றும் அனைத்து இந்திய கூந்தல், அழகு சங்கம் சார்பில் ஆன்லைனில் நடத்தப்பட்டது.
மொத்தமாக, இந்தப் போட்டியில் 1,146 நபர்கள் பங்கேற்றனர். அதில், ஷைலஜா, மணப்பெண் அலங்காரத்தை குறைவான நேரத்தில் செய்து முடித்து அசத்தியுள்ளார். அழகுக்கலை நிபுணர் பணியை, சைலஷா கடந்த 26 ஆண்டுகளாக செய்து வருகிறார். அவர் சொந்தமாக, அழகுநிலையம் ஒன்றும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோல்வி அடைந்தவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு - யுபிஎஸ்சி அறிவிப்பு!