ETV Bharat / bharat

வாடகை வருவாயில் வரிச் சுமையை குறைக்க சூப்பர் டிப்ஸ்! - வாடகை வருமானத்திற்கு எவ்வளவு வரி

வாடகை வருமானத்தின் அடிப்படையில் தனிநபர் வருமான வரி அடுக்குகள் மாறும் நிலையில் சொத்து உரிமையாளர்கள் வரி விலக்குகள் மற்றும் நிலையான விலக்குகளைப் பயன்படுத்தி தங்கள் வரிச் சுமையை குறைக்கலாம்.

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Feb 25, 2023, 11:27 AM IST

Updated : Feb 25, 2023, 11:55 AM IST

ஐதராபாத்: ஒருவர் வீட்டு வாடகை மூலம் ஈட்டும் வருவாய்க்கு வரி விதிக்கப்படும் என இந்திய வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வீட்டு வாடகை மூலம் வரும் வருவாய் வருடாந்திர வரிக் கணக்கில் காட்டப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டு பயனாளிக்கு வரிச்சு மையைக் குறைக்கச் சட்டம் அனுமதிக்கிறது.

நீண்ட காலத்திற்கு வாடகை மூலம் கிடைக்கும் வருமானம் தனிநபர் வருமான வரி அடுக்குகளை மாற்றுக் கூடியது. இந்நிலையில் வாடகை மூலம் வருவாய் ஈட்டும் உரிமையாளர்கள் வரிச்சுமையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

ஏதேனும் அசையாத சொத்தின் வாடகை அல்லது குத்தகையின் மூலம் பெறப்படும் வருவாயை வீட்டு சொத்திலிருந்து கிடைக்கும் வருமானம் என்ற அடிப்படையின் வருமான வரி அடுக்குகளின் கீழ் காட்ட வேண்டும். இதன் மூலம் உச்சபட்ச வருவாய் குறைக்கப்பட்டு வருமான வரியிலிருந்து விலக்கு பெற முடியும்.

மேலும் தனிநபர்கள் தங்கள் மொத்த வருமானத்தில் வீட்டு வாடகை வருமானத்தையும் சேர்த்து, வருமான வரியில் பொருந்தக் கூடிய வகையிலான அடுக்குகளின் கீழ் வரி செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு, தொழில் அல்லது வேறு எதிலிருந்தும் வருமானம் பெறாத ஒருவர் பெறும் வாடகைத் தொகை 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்றால் அப்போது அவர் எந்த வரியும் செலுத்த தேவையில்லை.

அடுத்த ஆண்டு வாடகை 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எடுத்துக் கொண்டால், வருமான வரி அடுக்குகளில் உள்ள 80C மற்றும் பிற பிரிவுகளின் கீழ் அவர் விதி விலக்குகளைப் பெற முடியும். அதேநேரம் வீட்டு உரிமையாளர், வாடகை வருமானத்திலிருந்து சில நிலையான விலக்குகளைப் பெறச் சட்டத்தில் அனுமதி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வாடகையிலிருந்து 30 சதவீதம் வரை சொத்து வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த விலக்குகள் அளிக்கப்படுகின்றன.

உதாரணத்திற்கு ஒருவர் வாடகைத் தொகையாக 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுகிறார். இதில் சொத்து வரி 20 ஆயிரம் ரூபாய் மீதமுள்ள தொகை 3 லட்ச ரூபாய். அதில் 30 சதவீதம் 90 ஆயிரம் ரூபாய், இதில் வீட்டு வாடகையிலிருந்து கிடைக்கும் நிகர வருவாய் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய். இந்த வருவாய் வரி கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அதேநேரம் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களான என்.ஆர்.ஐ.களின், வீடு மற்றும் அசையாச் சொத்தின் மீதான வட்டிக்கு நிலையான விலக்கு பெற ம் இந்த வரி கணக்கீடு பொருந்தும்.

வீட்டுக்கடன் மூலம் வாங்கிய வீட்டை வாடகைக்கு விடும்போது, கடனுக்கான வட்டியை வரியில் கழித்துக் கொள்ளலாம். வருமான வரி பிரிவு 24 (b) இன் படி, 2 லட்ச ரூபாய் வரை வட்டியில் விலக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் மற்றவர்களுடன் சேர்ந்து கூட்டாகச் சொத்து வாங்கும் போது, இணை உரிமையாளர்களுக்கும் வரி விலக்கு கிடைக்கும். சொத்து வாங்கும் ஆவணத்தின் மதிப்பீடு அடிப்படையில் வரி விலக்கு கோர முடியும் என்றும், பிரிவு 24-ன் கீழ் பங்கு விகிதத்தின் அடிப்படையில் வட்டி செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வால்பாறை வனப்பகுதியில் விடப்பட்டது மக்னா யானை!

Last Updated : Feb 25, 2023, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.