ஹைதராபாத்: ஆண் என்றால் தாடி, தாடி என்றால் ஆண் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இன்றைய இளைய தலைமுறையினர் பலர் தாடி மீது அதீத காதல் கொண்டுள்ளனர். ஏன் இன்னும் சொல்லப் போனால் தாடியுடன் ஆண்களுக்குப் பந்த பாசமே அமைந்துள்ளது. அப்படி ஏன் ஆண்கள் தாடி மீது இந்தளவு பிரியம் கொண்டுள்ளனர் என்பது இயன்றளவிலும் புரியாத புதிராகவே உள்ளது.
சிலர் தங்களுக்கு முகப்பொலிவைக் கொடுக்கிறது, தங்களுக்கான தனி அடையாளத்தைக் கொடுக்கிறது, இப்படி பல்வேறு காரணங்களைக் கூறி தாடி வளர்க்கின்றனர். இன்றைய தலைமுறையினரின் தாடி ஈர்ப்பிற்கு வித்தாக இருக்கும் தலைவர்கள் எனப் பார்த்தால் ஆபிரகாம் லிங்கன், சேகுவாரா, புரட்சியாளர் காரல் மார்க்ஸ், தத்துவ ஞானி சாக்ரெட்டிஸ், இலக்கிய வாதி ஜி.பி.ஷா என பல்வேறு பெயர்கள் லிஸ்டில் நீள்கிறது.
முன்னதாக முரடனாக ஒருவரைப் பாவிக்கப் பயன்படுத்தப்பட்ட தாடி இன்று ஒருவரின் இயல்பை வெளிப்படுத்தும் நுணுக்கமாகச் செயல்பட்டு வருகிறது. உலகளவில் என்னென்னவோ தினங்கள் அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில், ஆண்கள் தாடி மீது கொண்ட அலாதியான காதல் தாடிக்கு என்று தனி நாள் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், தாடி விரும்பிகளால் செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை உலக தாடி தினமாக கொண்டாடப்படுகிறது அந்த வகையில் நேற்று உலக தாடி தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை இளைஞர்கள் கொண்டாடும் விதமாகப் பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் மற்றும் தாடி தொடர்பான தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு மகிழ்ந்தனர்.
காதல் தோல்விக்காகத் தாடி வளர்த்த தேவதாஸ் காலம் சென்று, தற்போதைய நவீன உலகத்தில் தாடி வளர்ப்பது ஒரு டிரெண்ட் ஆகிவிட்டது. மேலும் தாடி வளர்ப்பது அழகுக்காக மட்டும் தானா என்று கேட்டால், அது தான் இல்லை. தாடி வளர்ப்பதால் ஆண்களுக்குப் பலவகையான நன்மைகளும் இருக்கிறதாம்...
அப்படி என்ன நன்மைகள் என்று பார்த்தால், ஆண்கள் பெரும்பாலானோர் அவர்களின் சரும பராமரிப்பில் கவனம் கொள்வதில்லை. அப்படியானோருக்குப் பாதுகாப்பானாக இருப்பது அவர்களின் தாடி தான். தூசு, அழுக்கு, புகை என அனைத்திலிருந்தும் சருமத்தை மறைத்து ஒரு தடுப்பானாகச் செயல்படுகிறதாம் இந்த தாடி. மேலும், வெளியில் அலைந்து திரியும் ஆண்களின் பாதுகாப்பாகவும், வெப்பத்தினால் சருமத்தில் படியும் கருமை தன்மை நீங்கவும் வழிசெய்கிறது எனச் சரும நிருபர்கள் கூறுகின்றனர்.
மேலும், மூன்றில் முக்கியமானதாக, காற்றில் பரவுகின்ற கிருமிகளிடம் இருந்து பெரும்பாலான ஆண்களின் முகத்தைப் பாதுகாப்பதும் தாடி தான். தாடி இல்லாத ஆண்களைவிடத் தாடி வைத்திருக்கும் ஆண்களையே பெண்கள் விரும்புவதாக ஆய்வுகள் கூறுவதாகவும் தாடி வளர்க்கும் ஆண்கள் சிலர் கருத்துச் சொல்வதையும் நாம் பார்க்க முடிகிறது.
தாடி நீளமாக வளரச் செய்ய வேண்டியது என்ன?: எண்ணெய் சருமம், அழுக்கு ஆகியவற்றால் முடி வளர்ச்சி தடைப்படலாம். எனவே முகத்தைச் சுத்தமாகக் கழுவிவிட்டு இரவு தூங்கப்போகும் போது எண்ணெய் தடவி காலையில் அதனை சுத்தமாகக் கழுவ வேண்டும், அடிக்கடி தாடியை வெட்டுவதோ அல்லது ஷேப் செய்வதோ கூடாது. 4-ல் இருந்து 6 வாரங்கள் வரை வளரவிட வேண்டும். அப்போது தான் அதன் முழுமையான வளர்ச்சியைக் காணமுடியும், தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவை முகத்தில் முடி வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே 8 மணி நேரம் உறக்கம் என்பது தாடி வளர்ப்பில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உலக தேங்காய் தினம்: தேங்காயை இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமா?