நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 50.68 கோடியைக் கடந்து சாதனை படைத்தது. இன்று காலை 7 மணி நிலவரப்படி, மொத்தமாக 50 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரத்து 492 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை உடனடியாக வாட்ஸ்அப் மூலமாக பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
step 1 : MyGov கரோனா ஹெல்ப் டெஸ்க் வாட்ஸ்அப் எண் +91 9013151515-ஐ உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் சேர்க்க வேண்டும்
step 2 : அந்த நம்பரின் சாட் திரையில் ' covid certificate ' என டைப் செய்து அனுப்ப வேண்டும்
step 3 : உடனடியாக, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஆறு இலக்க OTP எண் வரும். அதனை மீண்டும் டைப் செய்து அனுப்ப வேண்டும்.
step 4 : பின்னர் அந்த சாட்பாக்ஸில் உங்களுக்கு வந்த COVID-19 தடுப்பூசி சான்றிதழை எளிதாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.