ETV Bharat / bharat

இந்தியர்கள் பயன்படுத்தும் கனடா பொருட்கள் மற்றும் சேவைகள்! - கனடா குறித்த செய்திகள்

How much of Canada is there in an Indians life: இந்தியா-கனடா இடையேயான பிரச்சினையில், கனடா பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என சமூக வலைத்தளத்தில் வரும் கருத்துகள். இதனால், இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினைகள் மற்றும் இந்தியாவில் உள்ள கனடா பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

How much of Canada is there in an Indians life?
இந்தியர்கள் பயன்படுத்தும் கனடா பொருட்கள் மற்றும் சேவைகள்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 9:12 PM IST

டெல்லி: காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில், இந்தியாவிற்குத் தொடர்வு இருப்பதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இதனால், இந்தியா - கனடா இடையே பிரச்சினை ஏற்பட்டது. தற்போது, இந்தியாவிலுள்ள சமூக வலைத்தளங்களில் கனடா பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்ற செய்தி பரவி வருகின்றன.

சமூக வலைத்தளங்களில், இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத அமைப்புகளுக்குக் கனடா துணை நிற்கிறது இதனால், கனடா சார்ந்த பொருட்களை இந்திய மக்கள் தவிர்க்க வேண்டும் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கனடா வாழ் இந்தியர்கள் உடனடியாக இந்தியாவிற்குத் திரும்ப வேண்டும் எனவும், கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அனைத்து, கனடா சார்ந்த பொருட்களுக்கு நிரந்தரமாகத் தடை செய்யவேண்டும் எனவும், இந்திய மக்கள் கனடா பொருட்களைத் தவிர்க்க வேண்டும் எனக் கருத்துக்கள் பரவி வரும் இந்த நிலையில் கனடா பொருட்கள் இந்தியாவில் உள்ளன யாவை? எத்தனை கனடா நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன? கனடா இந்தியாவில் முதலீடு செய்ததது எவ்வளவு? என்பதைப் பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஹர்தீப் சிங் கொலை சம்பவம் : கனடாவுக்கு அமெரிக்க உதவி! ரகசிய ஏஜெண்டுகளை வழங்கியதாக தகவல்!

2022ஆம் ஆண்டு, இந்தியா-கனடா இடையிலான பொருளாதார வர்த்தகம் டாலர் 10.50 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் ஏற்றுமதி டாலர் 6.40 பில்லியன் எனவும், இறக்குமதி டாலர் 4.10 பில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளன. 600க்கும் மேற்பட்ட, கனடாவின் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன என இந்திய உயர்மட்ட ஆணையம் இணையதள தகவலில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றன.

இந்தியாவிற்குக் கனடாவிலிருந்து பருப்பு வகைகள், இரும்பு, தாமிரம், இரசாயன பொருட்கள், கனிமங்கள், மரக்கூழ் போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இந்த பொருட்களை இந்தியா தனது நட்பு நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்த பொருட்களுக்காகக் கனடாவை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது எனக் கூறப்படுகின்றன.

G20 மாநாட்டின் படி, கனடா-இந்தியா உடனான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) அடிப்படியில், ஆரம்பக்கால முன்னேற்ற வர்த்தக ஒப்பந்த (EPTA) பேச்சுகளை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. கனடா இந்தியாவிற்கு எதிரான அமைப்புகளுக்கு ஆதரவு தருவதால் இந்த வர்த்தக பேச்சுகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா-கனடா விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) படி, கனடா தனது வர்த்தகத்தை டாலர் 6.5 பில்லியன் வரை வளர்ச்சியடையச் செய்திருக்கலாம். மேலும், 2035ஆம் ஆண்டில் கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) டாலர் 3.8 பில்லியன் முதல் டாலர் 5.9 பில்லியன் வரை உயர்த்தி இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: விண்ணை முட்டும் விமான டிக்கெட் விலையேற்றம்..! இந்தியா - கனடா பதற்றம் காரணமா..?

கனடாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மெக்கெய் உறைந்த உணவுப் பொருட்கள் (McCain's Frozen Food Products) தயாரிப்பு நிறுவனம், பிரெஞ்ச் பிரைஸ் மற்றும் உருளைக் கிழங்கு சம்பந்தமான பொருட்கள் உற்பத்தி செய்கின்றன. தற்போது, இந்த நிறுவனம் டெல்லி என்சிஆர், லூதியானா, சண்டிகர், பதிண்டா மற்றும் மும்பையில் செயல்பட்டு வருகின்றன. 2026ஆம் ஆண்டு, இந்தியா முழுவதும் 120 கடைகள் திறக்க திட்டமிட்டு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கனடாவிலிருந்து, மசூர் பருப்பு (சிவப்பு பருப்பு) இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. கனடாவிலிருந்து, ஆண்டுக்கு நான்கு முதல் ஐந்து லட்சம் டன் வரை மசூர் பருப்பு (சிவப்பு பருப்பு) இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, கனடா-இந்தியா பிரச்சினை இந்தியாவிலுள்ள பருப்பு வியாபாரிகளைக் கவலை அடையச் செய்துள்ளன.

கனடா ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரிய (CPPIB) உணவுப் பொருட்கள் வழங்கும் Zomato நிறுவனத்தின் 2.42 சதவீத பங்குகளையும், UPI பண பரிவர்த்தனை செய்ய உபயோகப்படுத்தப்படும் PayTmல் 1.76 சதவீத பங்குகளையும், பொருட்களை வீட்டிற்குக் கொண்டு சேர்க்கும் Delhivery நிறுவனத்தில் 6 சதவீத பங்குகளையும், அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் Nykaaவின் 1.47 சதவீத பங்குகளையும், மொபைல் டவர் அமைக்கும் இண்டஸ் டவர் (Indus Tower) நிறுவனத்தின் 2.18 சதவீத பங்குகளையும், கோடக் மஹிந்திரா நிதி நிறுவனத்தில் 2.68 சதவீத பங்குகளையும், ஐசிஐசிஐ வங்கியில் பங்குகள் மட்டும் டாலர் 10 மில்லியன் உள்ளன. கனடா ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியம் இந்தியாவில் மட்டும் டாலர் 55 பில்லியனுக்கு மேலாக முதலீடு செய்துள்ளன. கனடா ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியத்தின் தற்போதைய இந்திய மதிப்பு ரூ.948.10 கோடியாக உள்ளன. மேலும், இந்திய நிறுவனங்களில் Infosys, Wipro, Flipkart, Acko மற்றும் Byju's ஆகியவற்றிலும் இந்த வாரியம் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அருணாச்சல வீரர்களின் விசா விவகாரம்; இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த சீனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.