ஜி.பி. பண்ட் மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "மருத்துமனையில் அலுவல் மொழியாக மலையாளம் பயன்படுத்தப்படுவது குறித்து புகார் வந்துள்ளது. அதேசமயம் அதிகபட்ச நோயாளிகளுக்கும், உடன் பணியாற்றுவோருக்கும் இந்த மொழி தெரியாது.
எனவே அனைத்து செவிலியர் பணியாளர்களும் இந்தி, ஆங்கிலத்தை மட்டுமே அலுவல் மொழியாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது, இல்லையெனில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.