ETV Bharat / bharat

காதலுக்கு எதிர்ப்பு - திரைப்பட பாணியில் மகளை ஆள் வைத்து தீர்த்துக்கட்ட முயற்சித்த தந்தை கைது! - மீரட்டில் ஆணவக்கொலை முயற்சி

மகள் காதலிப்பது பிடிக்காத தந்தை, திரைப்பட பாணியில் ஆள் வைத்து மகளை தீர்த்துக்கட்ட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

horror
horror
author img

By

Published : Aug 7, 2022, 8:59 PM IST

மீரட்: உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், குரங்குகளுக்கு பயந்து மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். காயமடைந்த சிறுமி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையில் இருந்த சிறுமிக்கு, கம்பவுண்டர் ஒருவர் விஷ ஊசி செலுத்தியதாகத்தெரிகிறது. அதன் பிறகு சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால், ஏதோ தவறு நடந்துள்ளதாக சந்தேகித்த மருத்துவர்கள் சிசிடிவி பதிவுகளைப் பார்த்தனர். அதில், மருத்துவர் வேடத்தில் வந்த இளைஞர் ஒருவர், சிறுமிக்கு ஊசி போட்டுவிட்டு தப்பியோடியது பதிவாகியிருந்தது. அந்த இளைஞர் மற்றொரு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரிபவர் என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து கம்பவுண்டர் ரமேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், தனக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, சிறுமியின் தந்தைதான் கொலை செய்யச் சொன்னதாக ரமேஷ் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுமியின் தந்தையிடம் விசாரித்ததில், மகள் காதலிப்பது பிடிக்காததால் கம்பவுண்டரை வைத்து கொலை செய்ய முயன்றதாக ஒப்புக்கொண்டார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியின் தந்தை, கம்பவுண்டர் ரமேஷ் மற்றும் உடந்தையாக இருந்த செவிலியரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஊசிகள் மற்றும் 90 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

திரைப்பட பாணியில் பெற்ற மகளை தந்தையே ஆள் வைத்து கொல்ல முயற்சித்த சம்பவம் மீரட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஆன்லைனில் பரிசு பெற்றதாக கூறி ரூ 6.34 லட்சம் மோசடி செய்த வட மாநில கும்பல் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.