ETV Bharat / bharat

இந்தியாவில் முதல்முறையாக புல்லட் ரயில் சேவை 2026இல் தொடக்கம்!

இந்தியாவில் முதல்முறையாக செயல்படுத்தப்பட உள்ள புல்லட் ரயில் சேவை திட்டம் 2026ஆம் ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

புல்லட் ரயில் சேவை
புல்லட் ரயில் சேவை
author img

By

Published : Jun 6, 2022, 5:50 PM IST

சூரத் (குஜராத்): குஜராத்தின் சூரத்தில் நடைபெற்று வரும் அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டப்பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று (ஜூன் 6) ஆய்வு மேற்கொண்டார். இந்த ரயில் குஜராத்தின் அகமதாபாத் - மகாராஷ்டிராவின் மும்பை இடையே மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் 508 கி.மீ., தூரம் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் இரண்டு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை தற்போது உள்ள ஆறு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐப்பான் நாட்டின் நிதியுதவியுடன் ரூ.1.1 லட்சம் கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "முதல் புல்லட் ரயிலை 2026ஆம் ஆண்டு குஜராத்தின் சூரத் மற்றும் பிலிமோரா இடையே இயக்க திட்டமிட்டுள்ளோம். அகமதாபாத்-மும்பை இடையே இயக்கப்பட உள்ள இந்த ரயில் சேவை பணிகள் நல்ல முன்னேற்றத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புல்லட் ரயில் செல்லும் வழித்தடத்தில் 61 கிமீ தூரம் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 150 கி.மீ., தூரம் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,"மகாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களால் புல்லட் ரயில் பணிகள் மெதுவாக நடப்பதாக அலுவலர்கள் கூறினர். மகாராஷ்டிரா அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திட்டம் விரைவாக முடிய அரசு ஒத்துழைக்க வேண்டும். இது தேசிய திட்டம், இதில் அரசியல் கூடாது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: உண்மையான பிரச்னைகளை மறைக்க பாஜக வகுப்புவாத அரசியலைப்பயன்படுத்துகிறது: சரத் பவார் தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.