ETV Bharat / bharat

திருமணம் செய்து வைப்பதாக அழைத்துச் சென்று ஆணவக்கொலை செய்த குடும்பம்... உடல்களை ஆற்றில் வீசப்பட்ட கொடூரம்... - bodies dumped into river

கர்நாடகாவில் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாகக் கூறி அழைத்துச் சென்ற குடும்பத்தினர், அவர்களை ஆணவக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்து வைப்பதாக அழைத்துச் சென்று ஆவணக்கொலை செய்த குடும்பத்தினர் - கர்நாடகாவில் பயங்கரம்

author img

By

Published : Oct 19, 2022, 10:54 AM IST

Updated : Oct 19, 2022, 11:31 AM IST

பொங்களூரு: கர்நாடக மாநிலம் கடாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாத் நெலகி (22). இவரும் பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல், சிறுமியின் வீட்டிற்கு தெரிய வர, சிறுமியின் குடும்பத்தினர் காதலுக்கு மறுப்பு தெரிவித்து பலமுறை எச்சரித்துள்ளனர். இதனால் இருவரும் சில நாட்கள் பேசாமல் இருந்துள்ளனர்.

பின்னர் செல்போன் வழியாக மீண்டும் பேசி வந்துள்ளனர். இதனை அறிந்த சிறுமியின் குடும்பத்தினர், மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது, ‘நான் திருமணம் செய்தால் நெலகியைத்தான் திருமணம் செய்வேன்’ என சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறோம் என்று சிறுமியின் சகோதரர் உள்பட சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, இருவரையும் அழைத்துக் கொண்டு உறவினர்கள் சென்றுள்ளனர். ஆனால், காதலர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை.

கொலை செய்யப்பட்ட காதலர் விஸ்வநாத் நெலகி
கொலை செய்யப்பட்ட காதலர் விஸ்வநாத் நெலகி

இதனைத்தொடர்ந்து விஸ்வநாத் நெலகியின் தந்தை அக்டோபர் 3ஆம் தேதி நர்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து அக்டோபர் 11ஆம் தேதி மீண்டும் கடத்தல் புகாரையும் நெலகியின் தந்தை அளித்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இதுதொடர்பாக சிறுமியின் சகோதரர் ரவி ஹூலன்னன்னவாரா (19), அவரது உறவினர் ஹனுமானந்தா மல்நதடா (22) மற்றும் பீரப்பா தல்வாயி (18) ஆகிய மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்த விசாரணையில், “அவர்கள் சிறுமியையும் அவரது காதலன் விஸ்வநாத் நெலகியையும் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் சகோதரியின் கழுத்தை, அவளது துப்பாட்டாவாலேயே நெரித்து கொலை செய்துள்ளனர். அதேபோல் நெலகியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

குறிப்பாக அவரது அந்தரங்க உறுப்புகள் மற்றும் நெஞ்சில் கல்லால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக, அவர்களது உள்ளாடைகளைத் தவிர்த்து பிற உடைகளை கழற்றி விட்டு அலமட்டி சாலை பாலத்தில் இருந்து ஓடும் கிருஷ்ணா ஆற்றில் வீசினர் என்ற திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மூவரையும் கைது செய்த காவல்துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் ஆற்றில் வீசப்பட்ட இருவரது உடல்களும் தேடப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மனைவி குடும்பத்தை உயிருடன் கொளுத்திய கணவர்

Last Updated : Oct 19, 2022, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.