Hockey World Cup 2023: ஒடிசாவில் ஹாக்கி உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று(ஜன.22) நடைபெற்ற கிராஸ் ஓவர் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதியன. அதில், நாக் அவுட் போட்டியில் இரு அணிகளுமே அட்டகாசமாக விளையாடி வெற்றிக்காக கடுமையாகப் போராடியது. அபாரமாக ஆடிய இந்தியா - நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே ஆட்ட முடிவில் தலா 3 கோல்கள் அடித்து ஆட்டம் சமமானது.
பின்னர், இது நாக் அவுட் போட்டி என்பதால் போட்டியின் முடிவைத் தீர்மானிக்க வேண்டும்; அதற்காக ஷூட் அவுட் அடிக்க 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதில் ஷூட் அவுட்டில் நியூசிலாந்து 5 கோல்களையும் தவறாமல் அடித்தது, ஆனால், இந்தியா 4 கோல்களை மட்டுமே அடித்தது. இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்குத் தகுதிபெற்றது. இதனால் 2023 ஹாக்கி உலக கோப்பை போட்டியில் இருந்து இந்திய அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது.
இதையும் படிங்க:IND VS NZ 2nd ODI: தொடரை கைப்பற்றியது இந்தியா..!