ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி ஹெச்எம் நிஸார் காண்டே பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய உளவுத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர், மாநில காவலர்களுடன் இணைந்து சம்பந்தப்பட்ட பகுதியில் நேற்றிரவு (ஜூன்3) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் மறைந்திருந்த ஹெச்எம் நிஸாரின் ஆள்கள் பாதுகாப்பு படையினரை கண்டதும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்த என்கவுன்ட்டர் நடவடிக்கையில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி ஹெச்எம் நிஸார் காண்டே சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து என்கவுன்ட்டர் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த என்கவுன்ட்டர் நடவடிக்கையின் போலீசாருடன், பொதுமக்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஹெச்எம் நிஸார் காண்டே, தன்னைத் தானே இயக்கத்தின் தளபதியாக அறிவித்து செயல்பட்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் வங்கி ஊழியர் சுட்டுக்கொலை